இதுதான் மோடி மாடல்!
இதுதான் மோடி மாடல்! கர்நாடகாவின் தும்கூருவில் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்சின் (HAL) இலகு உபயோக ஹெலிகாப்டர் (Light Utility Helicopter) தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி அவர்கள் 6 2.23 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஹெலிகாப்டர் மோடி அவர்களின் தாரக மந்திரமான 'இந்தியாவில் தயாரிப்போம்' என்பதின் அடிப்படையிலான 100% உள்ளூர் தயாரிப்பு! இரண்டு பைலட்டுகளும் , 6 பயணிகளும் இதில் பயணிக்கலாம். இது நாட்டின் வடக்கு எல்லையின் சியாசின் பனிப் பிரதேசம் போன்ற மிக உயரமான பகுதிகளில் இயக்க ஏதுவானது . ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லவும் , வான் வழி ஆம்புலன்சாக உபயோகிக்கவும், எல்லைப் பகுதி ராணுவத்திற்கான பொருள் விநியோகம் செய்யவும் உதவும். ஏன் , தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பீரங்கி ஊர்தியாகவும் பயன்படுத்தலாம். 20 ஆண்டுகளில் 1000 ஹெலிகாப்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தால் சுற்றியுள்ள பகுதிகளில் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். (இரா.ஸ்ரீதரன்)
Comments
Post a Comment